
தொங்கிய விழுதுகள் தாங்கும் நேரம்
விலகி போக விறகாய் நிற்போம்
ஒட்டிப் பிறந்ததும், ஒட்டப் பிறந்துமா உறவுகள்?
வயதேராத வாழ்வு கொண்டபின்
விளங்கட்டும் எல்லாம்!பகலெல்லாம் ஓடிக் கழித்து,
இரவெல்லாம் கூடிக் கழித்து
கவனியாது கழிந்த பருவம்
முதுகில் முதுமை ஏற்றும்
நெற்றி பொட்டிற்குச் சில்லறை மாற்றும்.
முதிர்ந்திருந்தால் வெளிறி சிரி!
முந்தியிருந்தால் வெளிரும் முன் சிரி!ஐம்புலனும் அரைபுலன்;
அரைகூரை ஆகாயம்;
குழிந்த விழிக்குள் பழங்கதை;
கூன் விழுந்தது வாலிப நாற்காலிக்கு!
அண்ணார்ந்து பாத்து ஆகாயம் சேகரி !
புவி அதிர வேர் விட்டு நட!!இடி தாங்க நீயிருக்க
யாருக்கோ விழுந்த
இடி கடி!
யுகம் கோடி ஓட விட்டு
முன் வெட்டிய
மின்னல் கொண்டாடு!!
திசை கோடி மூடியிருக்க
மேல் கொட்டிய
மழை கரைந்தாடு!!!சொன்னது பொய்த்துப் போகும்
சொல்லாதது நிலைத்து விடும்
சரித்திரம் என்று சொல்லி
சந்ததிகள் பாடித் திரியும்மகாகவி என விளிக்கலாம்,
கொடும்பாவி என பழிக்கலாம்
செம்மறிக்கூட்டம் துதி பாடவா
சக்கரவர்த்தி செய்யுள் படைத்தான்?
புரிந்தால் தலையாட்டு
இல்லையேல் வாய்பூட்டு !விதியென்பார், மீறலென்பார்.
விதிமுடிந்து விண்ணேறியபின்,
தூசிதட்டி தூர்வாரி
கவியென்பார், காவியமென்பார்.
நானறியாத வகை கூறி
தந்தையென்பார் என்னை,
தலைமுறையென்பார் தன்னை !காலம் போகட்டும் அதன் வழி...
விதி முறி - கவி வடி!!
இது - என் புவி !
அதில் - நான் கவி !!
11 comments:
பெயர் தெரியா கவியே..!
யார் நீ
புதுகவியா புலவனா..!
வீரம் செறிந்த வார்த்தைகள் - அதன்
ஓரம் முற்றிய வாக்குகள்..!
இளமையும் முதுமையும்
ஒரே கவிதையில்..!
அற்புதம் அத்தனையும்..!
முதல் வாசகனாய், நான்
பெரும் தமிழ் சேவகனாய்..!
வாழ்க தமிழ்
வளர்க தமிழ் புகழ்..!
தோழன் சக்தி..!
//காலம் போகட்டும் அதன் வழி...
விதி முறி - கவி வடி!!
இது - என் புவி !
அதில் - நான் கவி !!//
புதுக்கவிஞரே பாரதியே எழுதுவது போல் ஒரு தீர்க்கமான எழுத்தாய் இருக்கிறது
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக வசியப்படுத்தும் வரிகள்
பாரதி அறவே பிடிக்காத ஒருவராக இருந்தாலும் உங்களின் வரிகள் நிதர்சனம்
நெற்றி பொட்டிற்குச் சில்லறை மாற்றும்.
அரைகூரை
மிக சிலருக்கே இம்மொழி கைகூடும்
உங்களுக்கு கூடியிருக்கிறது
விஜய்
நன்றி சக்தி, Thenammailakshmanan, Suryanila, கவிதை(கள்) விஜய்...
உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கம் அழிகின்றன..
புரிந்தால் தலையாட்டு
இல்லையேல் வாய்பூட்டு !
வாய்பூட்டுடன் தலையாட்டுகிறேன்.. வாழ்த்துக்கள்..
போடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி அண்ணாதுரை and S.A. நவாஸுதீன்..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வெற்றி பெற வாழ்த்துகள்
Arputham thangalin kavithayil viyanthu viten!!!
Post a Comment